டிக் டாக்கிற்கு பதிலாக வலம் வரும் டிரேல் ஆப்..!
டிக் டாக் மாதிரியான இந்திய செயலியான டிரேல் கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி இந்தியாவில் அதிக பயனாளர்களை கொண்ட டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து டிக் டாக் போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்ய கூடிய டிரேல் செயலியின் தினசரி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







