தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் : நேற்றை விட இன்று மேலும் அதிகம்… 3645 பேருக்கு தொற்று உறுதி… 46 பேர் உயிரிழப்பு!!
????????????????????????????????????
தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. நேற்று 3509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 45 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இன்று நேற்றை விட பாதிப்பும், உயிரிழப்பும் மேலும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,358 ஆகும். இதனால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 41,357ஆக உயர்ந்துள்ளது. சொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு 46 ஆகும். இதன் மூலம் இதுவரை பலி எண்ணிக்கை 957ஆக உயர்ந்து உள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு பதிவாகாத நிலையில் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100ஐ கடந்துள்ளதுடன் மற்ற மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
சென்னையில் 1,956,
செங்கல்பட்டு 232,
மதுரை 194,
திருவள்ளூர் 177,
வேலூர் 149,
சேலம் 111,
காஞ்சிபுரம் 90,
ராமநாதபுரம் 72,
திருவண்ணாமலை 70,
கள்ளக்குறிச்சி 58,
ராணிப்பேட்டை 53,
கோவை 43,
தேனி 40,
தூத்துக்குடி 37,
விருதுநகர் 33 ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.







