நிலவில் பயன்படுத்தக்கூடிய கழிவறையை வடிவமைப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசு..!
நிலவிற்கான கழிவறையை வடிவமைப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கும் லூனர் லூ சவாலை நாசா அறிமுகம் செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் முந்தைய கால விண்வெளிப் பயணங்களில் விண்வெளி வீரர்கள் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்களை தீர்வு காணும் வகையில் மைக்ரோ ஈர்ப்பு விசை மட்டுமின்றி எதிர்கால சந்திர லேண்டர் விண்கலத்தில் நிலவின் ஈர்ப்பு சக்தியிலும் பயன்படுத்தக்கூடிய கழிவறையை வடிவமைக்க நாசா அழைப்பு விடுத்துள்ளது.
முதல் பரிசு பெறுபவர்களுக்கு 15 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களும் ஜூனியர் பிரிவில் பங்கேற்கலாம்.







