--- --:--:-- --

கார் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வந்த தகவல்… பாதி வழியில் அவசரமாக இறங்கிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்!!

df

தனது கார் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வந்த தகவலையடுத்து தமிழக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஓடும் காரில் இருந்து பாதி வழியில் அவசரமாக இறங்கி வேறு காரில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று யாரையும் விட்டு வைப்பதாக தெரியவில்லை. சாமான்யன் முதல் அரசியல் தலைவர்கள் , தொழிலதிபர்கள், விஐபிக்கள் என பலரையும் அலறவைத்துள்ளது. கொரோனா என்ற பெயரை உச்சரித்தாலே பலரும் அஞ்சி நடுங்கும் நிலை உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் விஐபிக்களின் பட்டியலும் தினமும் வெளியாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பால் அரசியல் புள்ளிகளும், பிரபலங்களும் பலியாகி பட்டியல் நீண்டு வருவதால் பலரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் டிரைவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தனது சொந்த தொகுதியான ஆரணிக்கு இன்று காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரை ஓட்டிச்சென்ற அவரது கார் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து ஒரு வழியில் உடனடியாக கார் நிறுத்தப்பட்டு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவசரமாக காரில் இருந்து இறங்கினார். பின்னர் வேறு காரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Right Menu Icon