மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொரோனா நிவாரண கடன் : உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார் !!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தீத்திப்பாளையம்,மாதம்பட்டி மற்றும் மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் உள்ளிட்ட இடங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி,வங்கிக்கடன் மற்றும் கொரோனா நிவாரண கடன்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம்,தொண்டாமுத்தூர் ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார்,மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திட்டத்தின் இயக்குநர் செல்வராசு,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






