--- --:--:-- --

கொரானா முன்னெச்சரிக்கையால் சிறு தொழில்கள் மூடப்படவில்லை… யாரும் அச்சப்படவும் வேண்டாம்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!

25

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு தொழில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை ; யாரும் அச்சப்படவும் வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை சீர்செய்ய உலக நாடுகளைப் பின்பற்றி வரிச்சலுகை மானியங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் எதுவும் மூடப்படவில்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். போதிய போதிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.

 

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தமிழகத்தில் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் சட்டப் பேரவையும் டாஸ்மாக்கும் தான் மூடப்படவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon