ஐயப்பன் கோவிலுக்கு சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரொனா தொற்று..!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்திலிருந்து சென்ற பக்தர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. சபரி மலைக்கு வரும் பக்தர்கள் கொரொனா இல்லை என்ற சான்றிதழுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு சான்றிதழ் இல்லாமல் வருபவர்களுக்கு நிலக்கல் என்ற இடத்தில் கொரொனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வந்த நபருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கொரொனா உறுதியானது.
இதையடுத்து அவர் ராணி பகுதியில் உள்ள கொரொனா பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று முன்தினம் திறக்கப்பட்ட சபரிமலை கோவில் நாளை மறுநாள் வரை திறந்திருக்கும். தினசரி 250 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.







