--- --:--:-- --

தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கு கீழே இறங்கிய கொரோனா… இன்று 3914 பேருக்கு தொற்று.. 9 மாவட்டங்களில் மட்டுமே நூறுக்கு மேலாக பாதிப்பு

4

மிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. நேற்று 4389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 4 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 3914 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினசரி எண்ணிக்கை 100-க்கு கீழாக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் கடந்த சில நாட்களாகவே இறங்குமுகவே உள்ளது. 81 நாட்களாக 5 ஆயிரத்திற்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாகவே படிப்படியாக குறைந்து வருகிறது.

 

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4929 ஆகும். இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் 39 ஆயிரத்து 121 பேர் ஆவர்.

 

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 56 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 1132 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 1036 ஆக பதிவாகியுள்ளது.

 

அடுத்த இடத்தில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. கோவையில் இன்று 319 பேருக்கும், செங்கல்பட்டில் 174 , சேலம் 188, திருவள்ளூர் 195, திருப்பூர் 166, காஞ்சிபுரம் 130, ஈரோடு 111, நாமக்கல் 117 என இந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பும் மற்ற மாவட்டங்களில் 100-க்கும் கீழாகவும் இன்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon