உணவு பேக்கிங்கின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள கொரொனா வைரஸ்..!
பதப்படுத்தப்பட்டு உறைய வைக்கப்பட்ட உணவுப் பேக்கிங்கில் உயிர்ப்புடன் இருந்த கொரொனா வைரஸை கண்டறிந்ததாக சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே முதன் முறையாக உணவு பேக்கிங் ஒன்றின் மேல் பகுதியில் உயிருடன் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் கிங்டாவோவில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
அங்கு தொற்று பரவியதன் காரணமாக ஆய்வின்போது இறக்குமதியான உறைந்த கடல்மீன் பேக்கிங்கில் உயிருடன் இருந்த கொரொனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு குறிப்பிட்ட பேக்கிங்கின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் இருந்ததாகவும் இதன் மூலமே மேலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.







