திருப்பூர் மாவட்டத்தில் 919 போருக்கு கொரோனா தொற்று உறுதி..! 2 பேர் பலி !!
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்கு தலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36,ஆயிரத்து, 592 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 30 ஆயிரத்து, 292 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 6025 பேர் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 533 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் மாவட்டத்தில் 44, 83 வயது ஆண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர் இதனைஅடுத்து இறப்பு எண்ணிக்கை 275 ஆக உள்ளது.





