--- --:--:-- --

இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா..!

2

11 சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 3 ஆயிரத்து 476 பயணிகளிடம் நடத்திய ஆர்‌டி‌பி‌சி‌ஆர் பரிசோதனையில் 6 பயணிகளுக்கு கொரொனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி பரிசோதனை நடத்தப்பட்டது.

 

இந்த பரிசோதனையில் 6 பயணிகளுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட 6 பயணிகள் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon