வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தியபோது நடந்த விபரீதம்..!
சென்னை வேளச்சேரி அருகே பழுதான பக்கெட் வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்று சிறுவன் தண்ணீரில் நேரடியாக மூழ்க வைத்து சூடேற்றும் பாக்கெட் வாட்டர் ஹீட்டர் எனப்படும் எமோஷன் ஹீட்டரை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் வைத்துள்ளார்.
சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் சூடாகி விட்டதா என அறிய பாத்திரத்தில் இருந்த தண்ணீருக்குள் கைவைத்து பார்த்துள்ளார்.அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழந்தார். ஹீட்டர் பழுதடைந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






