--- --:--:-- --

தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா..!

6

சென்னை எருக்கஞ்சேரியில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனி மறைமலை அடிகள் தெருவில் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் முதற்கட்டமாக 120 மாணவர்களுக்கும், இரண்டாம் கட்டமாக நேற்று 153 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் வந்திருக்கும் நிலையில் அதில் 26 மாணவர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

 

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு வகுப்பறைக்கு மாற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

 

Right Menu Icon