மதுரை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 11 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரொனா..!
மதுரை அரசு கொரொனா மருத்துவமனையைச் சேர்ந்த 11 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்களுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது. நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்ந்தால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.




