--- --:--:-- --

காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து குடும்பத்துடன் சேர்த்து வைத்த போலீசார்..!

10

த்திரபிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து சென்னை போலீசார் குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.

 

சென்னை பாண்டிபஜார் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் தாகிரா இதற்கு முன் மாநில குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் இருந்து இதுவரை காணாமல் போன 300 பேரை கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளார்.

 

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் குணமடைந்த நபர் ஒருவர் குடும்பத்துடன் சேர விரும்புவதாக கூறிய ஓம்பிரகாஷ் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது தெரியவந்தது.

 

இதனையடுத்து லக்னோவில் உள்ள காவல் நிலையம் மூலம் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து சேர்த்து வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon