2 கோடி ரூபாய் சம்பளம் பெறும் இந்திய இளம்பெண்..!
இந்தியாவை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய் அளித்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தீப்தி என்பவர் அங்கு உள்ள அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.
அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக் கழகத்தில் எம்எஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவருடைய படிப்பு முடிந்து பல்கலைக்கழக வளாக தேர்வின்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது.
அவருக்கு ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.




