--- --:--:-- --

வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியருக்கு கொரொனா உறுதி!

11

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் பணியாற்றும் அலுவலக ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

இதனையடுத்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த கட்டிடத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டு கொரொனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 622 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon