--- --:--:-- --

நடிகர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குழந்தை உருவில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல்!

9

நடிகை நயன்தாராவுக்கு கொரொனா தொற்று என வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

நடிகை நயன்தாராவுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டதால் அவரும் விக்னேஷ் சிவனும் தனிமைப்படுத்தி கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ செயலி ஒன்றின் மூலம் குழந்தைகள் போன்ற தோற்றத்தில் தானும் நயன்தாராவும் நடனமாடும் வீடியோவே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

 

மேலும் தாங்கள் நலமுடன் இருப்பதாகவும் தன்னைப் பற்றியும், நயன்தாரா பற்றியும் வெளியாகும் நகைச்சுவையான செய்திகளை பார்க்க கடவுள் போதுமான ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருப்பதாகவும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon