--- --:--:-- --

நாளை மறுநாள் விஜய்யை சந்திக்கும் 2 முன்னாள் அமைச்சர்கள்..!

7

டந்த 16-ந்தேதி விராலிமலையை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் அ.தி.மு.க.வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ்ந்து வந்தனர்.

 

 

இந்நிலையில் இருவரும் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைய உள்ளனர். இருவரும் த.வெ.க. தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை சந்தித்து த.வெ.க.வில் இணைகிறார்கள். இதற்கான விழா நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

 

அப்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஏற்கனவே த.வெ.க.வில் சேர்ந்து உள்ள பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், பச்சைமால், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி ஆகியோரும் விஜய்யை சந்திக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே த.வெ.க.வில் இணைந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon