--- --:--:-- --

டெல்லியில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா!

13

கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 444 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் 71 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

இந்த நிலையில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் நாள்தோறும் 20 முதல் 24 ஆயிரம் பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்தை நெருங்குவதாகவும் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.

 

மேலும் டெல்லியில் சிகிச்சைக்காக பத்தாயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாக தெரிகிறது. சிகிச்சையில் உள்ள 25 ஆயிரம் பேர்களில் 15 ஆயிரம் பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

Leave a Reply

Right Menu Icon