என்.எல்.சி விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி அன்று இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.இந்நிலையில் சென்ற மூன்றாம் தேதியன்று சிவகுமார் என்ற பொறியாளரும், நேற்று பொறியாளர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் என இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வைத்தியநாதன் என்ற நிரந்தர தொழிலாளியும் மேலும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.







