--- --:--:-- --

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு!

8.1

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,195 ஆக அதிகரித்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் 107 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாகவும், 2,605 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட 1,195 பேரில் 3,561 பேர் குணமடைந்து இருப்பதும் சைலஜா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon