--- --:--:-- --

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லாத த.வெ.க ஆட்சி – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

01

சிங்கப்பெண்’ அதிரடிப்படையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு, காவல் ஆய்வாளர் ஒருவரே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகப் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத திறனற்ற ஆட்சிதான் ‘தூய சக்தியா?’ என கேள்வி எழுப்பியுள்ள அவர், இது வெட்கக்கேடானது என்றும் விமர்சித்துள்ளார். மேலும், “நான் உங்கள் அண்ணன்” என்று மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்துக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon