--- --:--:-- --

பிராங் வீடியோக்களை வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்க கோரி புகார்..!

10

பிராங் வீடியோக்களை வெளியிட்டு யூடியூப் சேனல்களை முடக்கி கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரோகித் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் முதியோர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் வகையில் சில யூடியூப்சேனல்கள் வீடியோ எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால் தமிழ் கலாச்சாரம் சீரழிந்து பலர் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் இதுபோன்ற செயல்களை உடனடியாக முடக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon