பேருந்தின் பக்கவாட்டில் கழன்று விழுந்த பாகங்கள்..!
மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் இரும்பு கதவு கழன்று விழுந்த நிகழ்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி வரை இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்று மாட்டுத்தாவணி அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பக்கவாட்டில் இருந்த சில இரும்பு பாகங்களும் சாலையில் கழன்று விழுந்தன .
பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சுதாரித்துக்கொண்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை மாநகரில் உள்ள அரசு பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





