--- --:--:-- --

ட்விட்டரில் புகார்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்..!

5

திருவள்ளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு மருந்து வாங்க சென்றபோது காவல்துறையினர் அபராதம் விதித்தது குறித்து முதலமைச்சருக்கு ட்விட்டரில் தெரிவித்ததால் வீடு தேடிச் சென்று பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

 

செவ்வாய் பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார். காக்களூரில் அவரை வழிமறித்த காவல்துறையினர் ஊர் அடங்கை மீறியதாக கூறி 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாக செலுத்தி விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பியது குறித்து அவர் முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

 

இதையடுத்து முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி திருவள்ளூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரிடம் 500 ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டு மகளுக்கு தேவையான மருந்துகளையும் இலவசமாக வழங்கினார்.

Leave a Reply

Right Menu Icon