திண்டுக்கலில் கல்லூரி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
முன்னால் சென்ற வாகனம் திடீரென திரும்பியதால், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்துள்ளது.



