கோவை : விடிய,விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு நிரம்பிய காரமடை பெள்ளாதி குளம். விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சி !!!
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி அருகே 100 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது.இக்குளத்தை சுற்றிலும் பெரும் விவசாய நிலங்களே உள்ளன.கறிவேப்பில்லை,வாழை உள்ளிட்ட பலதரப்பட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு விடிய,விடிய கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக பெள்ளாதி குளத்திற்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முழுமையாக நிரம்பியது.மேலும்,உபரி நீர் அணைக்கட்டு வழியாக வெளியேறி வருவதால் பெள்ளாதி,சிக்காரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும்,விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும்,50 அடி ஆழம் கொண்ட காரமடை பெள்ளாதி குளத்தில் இருந்து காரமடை பேருராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க கட்டுமானப்பணிகளும் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






