--- --:--:-- --

கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

01

ரூரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு கரூர் செல்லாத முதலமைச்சர் விஜய், முதல்முறையாக இன்று அங்கு சென்றார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

 

 

அதன்படி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து கரூர் சென்றார். கரூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து கரூர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முதலமைச்சர் விஜய் வந்தடைந்தார். இந்த கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தான் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய துயரம். நான் மக்களை சந்தித்த போது அரியலூரில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த கூட்டத்தை தவிர்த்தேன்.

 

 

ஆனால் கரூர் கூட்டத்தில் காவலர்கள் என்னை எச்சரிக்கவில்லை. காவலர்கள் நினைத்து இருந்தால் அந்த கூட்டத்தை தடுத்து இருக்க முடியும். ஆனால் அவர்களை நான் முழுமையாக நம்பினேன். நெடுஞ்சாலையில் இருந்து காவலர்கள் என்னை அழைத்து வந்தது நாடகம். கரூரில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை யாரிடம் வந்தது என்றும் கேள்வி எழுப்பினார். கரூரில் இருந்த கூட்டத்திற்கு ஏற்ப போலீசார் நமக்கு போதிய பாதுகாப்பு தரவில்லை. கரூர் சம்பவத்தில் நான் குடும்ப உறவுகளை இழந்தேன். உறவுகளை இழந்த என் மீதே பழிப்போட்டார்கள்.

 

 

 

மக்களுக்கு நான் நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன். கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு மக்கள் காலம் காலத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும். சட்டசபையில் நான் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று தான் சொன்னேன். எந்த கட்சி கூட என்று சொல்லவில்லை, அதற்கே அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்களே எங்கள் அப்பா பீரோவில் இல்லை என்பது போல் நடந்து கொண்டனர்.

 

 

அரசு துறைகளில் இருந்த லஞ்சம், ஊழலை ஒழித்துள்ளோம். மக்கள் இப்போது சந்திக்கும் வேலை நடக்கிறது, அதைவிட அரசு அலுவலகத்தில் மரியாதையும் கிடைக்கிறது என்கின்றனர். அண்ணாவின் பிறந்த நாளின் போது தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும். ரீல் அல்ல, ரியல் தாய்மாமன் சீர் வழங்கப்படும்.

 

ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியது போல் இருந்தது கடந்த கால திமுக ஆட்சி. முதலமைச்சர் பேசுங்கள், பேசுங்கள் என்கின்றனர். பேச ஆரம்பித்தால் சட்டசபையில் இருந்து ஓட்டம் பிடித்துவிடுகிறார்கள். இனி சட்டசபை கதவுகளை மூடிவிட்டு தான் பேசணும் போல் உள்ளது. மேகதாது அணை குறித்து எங்கு பேச வேண்டுமோ? அங்கு பேசுவோம். Talk Less Work More என்பது எங்கள் கொள்கை. கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் நினைவாக தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon