--- --:--:-- --

126 கர்ப்பிணிகளுக்கு பிரம்மாண்ட வளைகாப்பு..!

7

மிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட இருகூரில் தவெக நகர செயலாளர் இ.க. மணிகண்டன் ஏற்பாட்டில் 126 கர்ப்பிணி பெண்களுக்கு பிரம்மாண்டமான வளைகாப்பு விழா நடைபெற்றது.

 

 

சட்டமன்ற உறுப்பினர் என்.எம். சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கர்ப்பிணிகளுக்கு ‘அண்ணன் சீர்’ வழங்கும் வகையில் தாய் வீட்டுச் சீதனப் பொருட்கள், வளையல்கள் மற்றும் தேவையான நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

 

 

பாரம்பரிய தமிழ் முறைப்படி சிறப்பாக நடைபெற்ற இந்த வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். முதலமைச்சர் விஜய் வலியுறுத்திய மக்கள் நலச் செயல்பாடுகளை செயல்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon