--- --:--:-- --

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

4

ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்கள் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களும் காலை மாலை என 2 வேளைகளிலுமே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக குறைந்திருந்தது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று மாலை தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,320க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை சற்று கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,350க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,170க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,00க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon