தேசிய விருது பெற்ற இயக்குனர் இரா. செழியன் காலமானார்
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான இரா.செழியன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் இயக்கிய முதல் படமான ‘டூ லெட்’ தேசிய விருதை வென்றது.கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இரா.செழியன்.
இயக்குநர் பாலாவின் பரதேசி படத்துக்காக 2013-ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார். அவர் இயக்கிய ‘டூ லெட்’ திரைப்படம் தேசிய திரைப்பட விருதை வென்றது.
மேலும், திரைப்பட ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்ற ‘உலக சினிமா’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இயக்குனர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை இரா.செழியன் உயிரிழந்தார்.





