--- --:--:-- --

ஆனி பிரதோஷம், அமாவாசை: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

10

னி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

இந்த நான்கு நாட்களிலும் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து அனுமதி அளித்துள்ளன. பக்தர்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, வனத்துறை அறிவுறுத்தல்களை கட்டாயம் கடைப்பிடித்து மலையேற வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லாமல் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon