--- --:--:-- --

கோவை: 7 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு..!

4

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 

அந்தவகையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு எஸ்.பி. வேலுமணியும், சூலூர் தொகுதிக்கு கந்தசாமியும், சிங்காநல்லூர் தொகுதிக்கு கே.ஆர்.ஜெயராமனும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு பி.ஆர்.ஜி. அருண்குமாரும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு தாமோதரனும், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு பொள்ளாச்சி ஜெயராமனும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதே போல கடந்த முறை கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இந்த முறை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ ஏகே செல்வராஜ் இந்த முறை போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் போட்டியிடுகிறார்.

Right Menu Icon