--- --:--:-- --

த.வெ.க. வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு..!

3

மிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள்(29-ந்தேதி) வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29-ந்தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

 

இக்கூட்டத்தில், மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், விஜய் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon