--- --:--:-- --

12ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு..!

5

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 12ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று காலையில் மற்றும் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் மாணவி கிடந்த இடத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகம் முழுமையாக பதில் அளிக்காத நிலையில் உடலை வாங்க பெற்றோர் மறுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon