--- --:--:-- --

அமைச்சர் மரிய வில்சனுக்கு பாஜக கடும் கண்டனம்!

01

மிழ் உச்சரிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமாகத் தெரிவித்த சில கருத்துகள் அரசியல் தளத்தில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கின்றன. நிதி அமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்து, மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற கடையநல்லூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தெரிவித்த இக்கருத்துகள் பேரவையில் காரசார விவாதத்திற்கு வித்திட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய ராஜேந்திரன், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது அமைச்சர் மரிய வில்சன் இலக்கணப் பிழையோடு பேசியதாகச் சுட்டிக்காட்டினார்.

 

அவருக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், வட்டார மக்களின் பேச்சு வழக்கிலும் தமிழ் தவழ்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், தனது கிறிஸ்தவ மதம் தனக்கு அன்பு எனும் மொழியை பயிற்றுவித்துள்ளதாகக் கூறினார். அமைச்சரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் ஆவேசமாக பதிலளித்தார். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவரை சமாதானம் செய்ய முயன்றார்.

 

 

சமாதானம் ஆகாத அமைச்சர், கேலி செய்கிறீர்களா என திமுகவினரைப் பார்த்து கூறிவிட்டு தனது மைக்கை வேகமாக தள்ளிவிட்டு அமர்ந்தார். இதைத் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. ராஜேந்திரன், யாரையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என்றார். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சரின் பேச்சு வழக்கில் தவறில்லை எனக் கூறினார்.

 

 

இந்நிலையில், தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா என அமைச்சர் மரிய வில்சனுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

 

 

இதேபோல, அமைச்சர் மரிய வில்சனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஆளும் கட்சியினருக்கு தமிழ் வாயளவில் இருக்கிறதே தவிர வாழ்க்கையில் இல்லை என விமர்சித்துள்ளார். தமிழ் உச்சரிப்பு தொடர்பான விவாதம் பேரவையில் தொடங்கி… அரசியல் தளத்திலும் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon