--- --:--:-- --

திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல பகுதிகளில்  சுழற்சி முறையில் “கொரோனா” தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை 

119f6d6c-7bfe-487f-b48f-3356057cbfba

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் க.சிவகுமார் உத்தரவின்பேரில் 1 வது மண்டல உதவி கமிஷனர் வாசுகுமார்  மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் ஒரு வேனில் 4 தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர்  விஷேச உடையுடன் 15 வார்டுகளிலும் தொடர்ந்து கொரோனா தொற்று நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணியை  சுழற்சி முறையில் தீவீரமாக செய்து வருகிறார்கள்.

 

இன்று காலை முதல் 14 வார்டுக்குட்பட்ட சிறுபூலுவப்பட்டி, கீதா நகர் 1,2,3 மற்றும் 4 வது வீதிகள், அம்மன் நகர்  சுற்றுப்பகுதிகள் உள்பட பல பகுதிகளில் கொரோனா  தொற்று நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது. இவர்களுக்கு உதவியாக அ.தி.மு.க மாநகர மாணவரணி 15,வேலம்பாளையம் பாசறை செயலாளர் தங்கராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களையும்  சேர்த்துக்கொண்டு இந்த களப்பணியில் ஈடுபட்டனர்.

 

அதேபோல் அனைத்து வார்டு பகுதிகளிலும் கொரோனா  தொற்று நோய் தடுப்பு மருந்து அடிக்கப்பட்டது. மேலும் போலீஸ் நிலையம், கோவில்கள், மசூதி மற்றும் பொதுமக்கள் அதிகமாக  கூடும் இடங்களிலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.

இதுகுறித்து 1 வது மண்டல கமிஷனர் வாசுகுமார் கூறியதாவது :- 1 வது மண்டல பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும்  கொரோனா தொற்று நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து பகுதிகளுக்கும் தலா ஒரு வேனில் சரியான விகிதத்தில் குளோரின் கலக்கப்பட்டு 5 கை ஸ்பிரே மிஷின் மூலம் சுமார் 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இப்பணியை செய்து வருகிறார்கள்.

 

நோய்க்கான அறிகுறி இருப்பது குறித்து யாராவது தகவல் கொடுத்தால் அந்த வீட்டை அல்லது அப்பகுதியில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநில அரசு கூறும் வரை  கொரோனா தொற்று நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon