--- --:--:-- --

சீன நிறுவனம் இந்திய தரவுகளை உளவு பார்க்கிறது..!

5

சீன நிறுவனமான சின்குவா இந்தியர்களின் தரவுகளை உளவு பார்ப்பதாக கூறப்படும் விவகாரம் குறித்து 30 நாட்களில் ஆய்வுநடத்தி அறிக்கை அளிக்குமாறு தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

சீன நிறுவனமான சின்குவா குறித்து டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பிய போது அது தனியார் நிறுவனம் என்றும் அதில் தலையிட முடியாது என சீன தூதர் கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் அத்துமீறும் சீன நிறுவனங்கள் குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்புகள் கலந்து ஆலோசித்த மத்திய அரசு 30 நாட்களுக்கு ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon