--- --:--:-- --

கன்னியாகுமரியில் நீட் தேர்வு மையத்தின் மீது மாணவி புகார்…!

4

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் தனியார் பயிற்சி மையம் தேர்வு கட்டணம் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். அகஸ்தீஸ்வரத்தில் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகள்தான் தஸ்லின்.

 

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நீர் பயிற்சி மையத்தில் 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி படித்து வந்தார். நீட் தேர்வு மையம் மூலம் கட்டவேண்டிய 2000 ரூபாய் பணத்தை நிர்வாகம் காட்டாததால் தனது ஓராண்டு உழைப்பு வீணாகி விட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்தார்.

 

மாணவியின் புகாருக்கு நாகர்கோவில் தனியார் நீட் தேர்வு மையம் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே எதிர்காலத்தில் எந்த ஒரு மாணவ மாணவியர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட நீட் பயிற்சி மையம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon