--- --:--:-- --

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்ளார்..!

3

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான பொது முடக்க கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

 

கடைகள் திறக்க அனுமதி, பேருந்துகள் இயங்க அனுமதி, இ பாஸ் ரத்து உள்ளிட்ட முக்கிய தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திரையரங்குகள் திறப்பு உள்ளிட்ட சில அம்சங்களுக்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்கிறது.

 

இந்த நிலையில் பொது முடக்க தளர்வுகளால் வரும் மாதத்தில் கொரொனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தலைமை செயலாளர் சண்முகம் அண்மையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

 

இதன் பின்னணியில் மருத்துவர் குழுவை முதலமைச்சர் சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon