--- --:--:-- --

பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த முதல்வர் கோரிக்கை..!

2

ருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

 

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் பருத்தி மற்றும் நூல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கனவே நவம்பர் மாதம் கடிதம் எழுதி இருந்ததாக மேற்கோள் காட்டியுள்ளார்.

 

பருத்தி மற்றும் நூலின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதன்படி பருத்தி 11 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்குமாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணுக் ஏலத்தில் பங்கேற்க ஏதுவாக தற்போதைய விதிகளை தளர்த்த முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். குறைந்தபட்சம் 500 பருத்தி விதைகள் போதுமானது என்ற வகையில் பல விதிகளையும், நிபந்தனைகளையும் சீரமைக்க மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Right Menu Icon