--- --:--:-- --

தமிழகம் வரும் தலைமைத் தேர்தல் ஆணையர்..!

3

ட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வரும் 25, 26 ஆம் தேதிகளில் தமிழகம் வருகிறார்.2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன.

 

திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி உறுதியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வரும் 25, 26 ஆம் தேதிகளில் தமிழ்நாடு வருகிறார்.

 

25 ஆம் தேதி சென்னை வரும் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயரதிகாரிகளுடன், தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளது.
அதைத்தொடர்ந்து 27 ஆம் தேதி புதுச்சேரிக்கு செல்லும் தலைமை தேர்தல் ஆணையர் அங்கு தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளார்.

 

இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் தேதி, மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon