--- --:--:-- --

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு எத்தனை சீட்..?

2

திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு 10 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்த வந்த நிலையில், திமுகவுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது.

 

கூட்டணியில் தேமுதிக-வை இணைத்தால் கூடுதலாக 31 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த இணைப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் நிறுவனம் நடத்திய சர்வே முடிவில் வெளியான தகவலை அடுத்து சபரீசன் மற்றும் அமைச்சர் எ.வ. வேலு இணைந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

 

தேமுதிக-விற்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை பதவி என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

 

கூட்டணி கட்சித் தலைவர்களிடமும் தேமுதிக கூட்டணியில் இணைந்தால் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை ஏற்கனவே கூறியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Right Menu Icon