நாளை முதல் ஏற்படும் மாற்றங்கள்..!
நாளை முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. அந்தவகையில், தனிநபர் நிதி, முதலீட்டுத் திட்டம், ஃபாஸ்டேக், பிஎஃப் உள்ளிட்ட பல மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்ட நிதியுதவி இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி கர்ப்ப காலத்தின் 4 ஆவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 4 ஆவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9 ஆவது மாதத்தில் ரூ.2000 என வங்கி கணக்கில் வரவைக்கப்படவுள்ளது.
மேலும் 3 ஆவது மற்றம் 6 ஆவது மாதங்களில் இருமுறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு அமலாவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.





