வரும் 14ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3
ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து வரும் 14ஆம் தேதி சந்திராயன்-3 விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
முன்னதாக 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது ஏவப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட திட்டம் உள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.






