--- --:--:-- --

கர்ப்பிணியின் உடலை 36 மணி நேரத்திற்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யவில்லை என போராட்டம்..!

3

ள்ளக்குறிச்சியில் கர்ப்பிணியின் உடலை 36 மணி நேரத்திற்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யவில்லை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 9 மாத கர்ப்பிணியான சுதா என்பவர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

 

அதையடுத்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் 36 மணி நேரத்திற்கும் மேலாகயும் அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்யவில்லை எனக் கூறி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சுதாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

 

தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே திருமணமான ஓராண்டில் சுதா உயிரிழந்தது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon