இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்.. பாதிக்கப்பட்டவருக்கு பாத பூஜை..!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழிக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரை தன் வீட்டிற்கு அழைத்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பாத பூஜை செய்து மரியாதை செலுத்தினார்.
சிறுநீர் கழிக்கப்பட்ட நிகழ்வால் தான் பெரும் வேதனை அடைந்ததாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இளைஞர் இனி தன் நண்பர் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரது வீட்டில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பகுதியை அதிகாரிகள் பிடித்தனர். சிறுநீர் கழித்த நபர் பாஜகவை சேர்ந்தவர் என்று கூறப்படும் நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய பிரதேச அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.






