தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
திருச்சி, கரூர், தூத்துக்குடி, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





