வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!
வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் 29 ஆம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.




